தேனி மாவட்டத்தில் சிறந்த ஒரு கல்வி நிறுவனமாக செயல்பட்டு வரும் என் எஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர் ராஜமோகன் கவர்னர் விருது வழங்கி கௌரவிப்பு விருதுநகர் காமராஜர் பொறியியல் கல்லூரியில் கல்லூரி நிர்வாகம் அன்னை பத்ரகாளி அறக்கட்டளை இணைந்து நடத்திய மாநில அளவிலான பள்ளி கல்லூரிகளின் சேவைகளை பாராட்டி சிறந்த கல்வி சேவைக்கான விருது வழங்கும் விழா முன்னாள் தமிழக முதல்வர் கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் விழா ஆகிய விழாக்கள் விருதுநகர் கல்லூரியில் கவர்னர் ஆர் .என் ரவி தலைமையில் நடைபெற்றது
இந்த விழாவில் தேனி மாவட்டத்தில் நல்லதொரு கல்வி நிறுவனம் என்ற தேனி நகர் மற்றும் மாவட்டம் முழுவதும் பொதுமக்களின் நன்மதிப்பை பெற்ற மாவட்ட மக்களின் இதயத்துடிப்பாக விளங்கும் நாடார் சரஸ்வதி கல்லூரி மற்றும் பள்ளிகளின் சேவையை ஊக்குவிக்கும் விதமாக நாடார் சரஸ்வதி கல்லூரி நிறுவனங்களின் தலைவரும் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவரும் மாவட்டத்தின் கல்வித் தந்தையுமான ராஜமோகன் அவர்களுக்கு விருதுநகர் காமராஜர் கல்லூரியில் நடந்த விழாவில் கவர்னர் ஆர் .என். ரவி விருது வழங்கி கௌரவித்தார்.