R. கல்யாண முருகன் செய்தியாளர்
விருத்தாசலம்
கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும், internal mark -யை, குறிப்பிட்ட மாணவர்களுக்கு மட்டும் குறைவாக வழங்கப்பட்டு, பழிவாங்குவதாக கூறி, பாதிக்கப்பட்ட மாணவர்கள் விருத்தாச்சலம் அரசு கொலைஞ்சியப்பர் கலைக்கல்லூரியின் கேட்டை, இழுத்து மூடி போராட்டத்தில் ஈடுபடுத்தால் பரபரப்பு.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அரச கொளஞ்சியப்பர் கலை கல்லூரியில், சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2023-24 ஆம் ஆண்டில் வணிகவியல் துறையில், படித்து முடித்த, எட்டு மாணவர்களுக்கு மட்டும், வழங்கப்படவேண்டிய internal mark -யை குறைவாக வழங்கப்பட்டதாக கூறியும், திட்டமிட்டே குறிப்பிட்ட எட்டு மாணவர்களை, கல்லூரி நிர்வாகம் பழி வாங்குவதாக கூறி, பல கட்ட போராட்டங்கள் நடத்தினர். ஆனால் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு internal mark வழங்காததால், ஆத்திரமடைந்த மாணவர்கள், கல்லூரி கேட்டை இழுத்து மூடி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கல்லூரி மாணவர்கள் வெளியே, செல்ல முடியாமல் அவதி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த விருதாச்சலம் காவல்துறையினர் மற்றும் கல்லூரி நிர்வாகம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதன் பேரில் போராட்டத்தை கைவிட்டனர்.