திண்டுக்கல் குமுளி தேசிய நெடுஞ்சாலை இரண்டு வழி சாலைநான்கு வழிச்சாலையாகிறது பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி தேனி திண்டுக்கல் மாவட்டத்தை இணைக்கும் திண்டுக்கல் – குமுளி இருவழிச்சாலை. நான்கு வழிச்சாலை ஆக மாற்றுவதற்கான ஆரம்ப கட்ட அடிப்படைப் பணிகளை துவக்கி உள்ளது
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை. இதனால், திண்டுக்கல்லில் இருந்து வத்தலக்குண்டு , பெரியகுளம் , தேனி , சின்னமனூர் , உத்தமபாளையம் , கம்பம் , கூடலூர் , குமுளி வரை செல்லக்கூடிய இருவழிச்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது
இந்த நான்கு வழி சாலை குறித்து கம்பம் சமூக ஆர்வலரும் தனியார் நிறுவன ஊழியருமான பி கார்த்திகேயன் அவர்களிடம் கேட்டபோது தற்பொழுது செயல்பட்டு வரும் இரண்டு வழி சாலையை நான்கு வழி சாலையாக மாற்றும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் மேலும் 4 வழிச்சாலையாக மாறும்போது போக்குவரத்துக்கு மிகவும் வசதியாக மாறும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை இவ்வாறு அவர் கூறினார்