அம்பை தாலுகா ரிப்போர்ட்டர் அகஸ்தியர் அருவி உரிமை மீட்பு குழு சார்பாக உண்ணாவிரத போராட்டம் 18 அம்ச கோரிக்கைகள் சம்பந்தமாக போராட்டம்

பாபநாச வன சோதனை சாவடியில் அகஸ்தியர் அருவிக்கு செல்ல வசூலிக்கப்படும் நுழைவு கட்டணத்தை நிறுத்த வேண்டும்
அம்பாசமுத்திரம் முதல் அகஸ்தியர் அருவி வரை தினசரி பஸ் போக்குவரத்து இயக்கப்பட வேண்டும் அத்துடன் ஆட்டோ போக்குவரத்தும் இயக்கப்பட வேண்டும் பொதிகை மலை அமைந்துள்ள அனைத்து மத வழிபாட்டு தளங்களுக்கும் எந்தவித தங்கு தடையும் இன்றி செல்லும் எங்கள் அடிப்படை உரிமை வேண்டும்
சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவின் போது கால் நாட்டு நிகழும் முதல் எட்டாம் பூஜை வரை 16 நாட்கள் தங்கி வழிபாடு நடத்தும் எங்களின் அடிப்படை உரிமை வேண்டும்
ஜமீன் சிங்கம்பட்டியில் இருந்து சொரிமுத்தையனார் கோவில் வரை உள்ள ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தி வந்த கோவிலுக்கு பாத்தியப்பட்ட காட்டு வழி பாதை வழியாக மலையாள வல்லயம் மற்றும் சங்கிலி பூதத்தார்க்கு உரிய சங்கிலியும் அந்த பாதையில் கொண்டு செல்லும் எங்கள் உரிமை வேண்டும்
பாபநாசம் தலையணை பகுதியில் இருந்து அகஸ்தியர் அருவி கல்யாண தீர்த்தம் கோடி லிங்கேஸ்வரர் கோவில் வரை பொதுமக்கள் நடந்து செல்வதற்கான ஆறடி பொது பாதையில் மீண்டும் மக்கள் நடந்து செல்லும் எங்கள் உரிமை வேண்டும்
காலை 6 மணிக்கு மேல் மாலை 6 மணிக்குள் சுத்தமான மூலிகை காட்டை சுவாசித்து உடற்பயிற்சி நடைபெற்ற செய்யும் எங்கள் உரிமை வேண்டும் கல்யாணி தீர்த்தம் கோடி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் ஆண்டாண்டு காலமாக நிலவு வந்த பிறகு நடத்தி வந்த பௌர்ணமி பூஜையை எந்தவித தங்கு தடை இன்றி நடத்திடும் எங்கள் அடிப்படை உரிமை வேண்டும்
பாபநாசம் தலையணை பகுதியில் உள்ள தடுப்பு கதவையை அகற்றி உரிய பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பலகைகளை வைத்து தலையணை பகுதியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் பாபநாசம் கோவில் விழி பிரகாரத்தில் பக்தர்களுக்கு இடையூறாக உள்ள இரும்பு கதவினை அகற்ற வேண்டும்
ஆக்கிரமிப்பு என்று கூறி பாபநாசம் கோவிலை சுற்றி வாழ்வாதாரர் நீட்டி வந்த அடித்தட்டு வியாபாரிகளை அப்புறப்படுத்தியதை கண்டிப்பதோடு அந்த வியாபாரிகள் வாழ்வாதாரத்திற்கு நிரந்தர ஏற்பாடு செய்ய வேண்டும் சேர்வலர் காரையார் அணைகளை பார்வையிட பல ஆண்டுகளாக உள்ள எங்கள் உரிமை வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது