நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒருவார காலமாக இயற்கை சீற்றம் பெருமழை நிலச்சரிவு போன்று நடந்துகொண்டிருக்கிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போர்க்கால அடிப்படையில் சீர்படுத்த அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியதின் பேரில் குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் . க. ராமச்சந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள், தி.மு.க நிர்வாகிகள் நேரில் பார்வையிட்டனர்.