மதுரையில் பொது விநியோகத்தை பலப்படுத்தவும். பொது விநியோகத்தில் உள்ள குறைபாடுகளை போக்க கோரியும், காலிப் பணியிடங்களை நிரப்புவது, தமிழகம் முழுவதும் தற்பொழுது காலியாக உள்ள பணியிடங்களில் 12(3) ஒப்பந்தத்தின் படி 2013-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டுவரை உள்ள பருவகால பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமெனவும், நிரந்தர தன்மையுடைய பணியிடங்களை வெட்டி சுருக்கும் நிகழ்வை கைவிட கோரியும், நவீன அரிசி ஆலைகளை நவீனப்படுத்துவதும், காலியாக உள்ள ஆப்பரேட்டர், டெக்னிஷியன்கள் பணியிடங்களை
உடனே நிரப்ப கோரியும்,
2023 ம் ஆண்டு உதவியாளரிலிருந்து கண்காணிப்பாளர் பதவி உயர்வில் உள்ள குளறுபடிகளை தவிர்த்து வெளிப்படை தன்மையாக செயல்பட கோரியும்,மண்டலங்களிடையே பணியிடை மாற்றம் மேற்கொள்ளும் போது பணி மூப்பு அடிப்டையில் பணி மாற்றம் வழங்கிட வேண்டுமென கோரியும்,விழிப்பு பணிக் குழுவில் நீண்ட காலமாக பணிபுரியும் களப்பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் விதிகளின்படி இருக்கை மாற்றக் கோரியும், குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ9,000/- வழங்கிட கோரியும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 20 ல் மாநிலம் தழுவிய கையெழுத்து இயக்கமும், அதேபோல் ஜூலை 30ல் சென்னையில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற உள்ளது,
என்பதை விளக்கும் விதமாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொது தொழிலாளர் சங்கம் சி.ஐ.டி.யு சார்பில் மதுரை மண்டலம் அலுவலகம் முன்பு விளக்க வாயிற் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு கல்யாணகுமார் தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் சண்முகம், மாநிலச் செயலாளர் கதிரேசபாண்டியன் ஆகியோர் பேசினர்.
நிறைவு செய்து வைத்து சி.ஐ.டி.யு மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.லெனின் பேசினார். மண்டலப் பொருளாளர் ஈஸ்வரன் நன்றி கூறினார். மண்டல செயலாளர் அழகு லெட்சுமணன், துணைச் செயலாளர் தியாகராஜன், துணைத் தலைவர்கள் செல்லமணி, ஜோதிபாசு, பெருமாள் ஆகியோர் உட்பட தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.