தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே
கூனஞ்சேரியில் விவசாயிகளுக்கு குருவை தொகுப்பு வழங்குவதில், வேளாண் அதிகாரிகள் பாகுபாடு காட்டுவதாக குற்றம் சுமத்தி..
துணை வேளாண்மை விரிவாக்கம் அலுவலகம் முன்பு, காவிரி விவசாய பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா, கூனஞ்சேரி ஊராட்சியில் குருவை நடவு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் குருவை தொகுப்பு வழங்கிட வலியுறுத்தியும், விவசாயிகளுக்கு குருவை தொகுப்பு வழங்குவதில் வேளாண்மை அதிகாரிகள் பாகுபாடு காட்டுவதாக குற்றம் சுமத்தும் விவசாயிகள், பாரபட்சம் இன்றி அனைத்து விவசாயிகளுக்கும் குருவை தொகுப்பு வழங்க வேண்டும் எனவும் அரசியல்வாதிகளுக்கு முன்னுரிமை கொடுக்காதே, விவசாயிகளும் வெளிப்படையாக செயல்படு, விண்ணப்பத்திற்கு 500-1000, செலவாகுது, லஞ்சம் தலை விரித்து ஆடுது உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பி வேளாண்மை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசை கண்டித்து, கூனஞ்சேரியில் அமைந்துள்ள துணை வேளாண்மை விரிவாக்க அலுவலகம் முன்பு, காவிரி விவசாய பாதுகாப்பு சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.