பாலமேட்டில் காமராஜர் பிறந்த நாளையொட்டி மாநில அளவிலான கைப்பந்து போட்டி

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் பாலமேட்டில் பெருந்தலைவர் காமராஜர் 122வது பிறந்த நாளையொட்டி காமராஜர் கைப்பந்து குழு சார்பில் ஆண்கள், பெண்கள் மற்றும் மாணவர்களுக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது.

இதற்கு நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் நாகராஜன், செயலாளர் சுரேஷ், துணைத் தலைவர் கணேசன் பொருளாளர் ரமேஷ் ஆகியோர் தலைமை தாங்கினார்.

மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி பொருளாளர் கார்த்திக், நாம் தமிழர் கட்சி நகர செயலாளர் சந்துரு, முன்னாள் சேர்மன் கஜேந்திரன், துணை சேர்மன் ராமராஜன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மஞ்சமலை ட்ரேடர்ஸ் சுரேந்திரன் வரவேற்றார். பாலமேடு பேரூராட்சி சேர்மன் சுமதிபாண்டியராஜன், போட்டியை துவங்கி வைத்தார்.

இந்த போட்டியில் திண்டுக்கல், சேலம், கரூர், ஈரோடு, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றனர்.

இரண்டு நாட்கள் நடந்த இந்த போட்டியில் ஆண்கள், பெண்கள், மாணவர்கள் என தனித்தனியே முதல் மூன்று இடங்களை பிடித்த அணிகளுக்கு பரிசு தொகை, மற்றும் கோப்பைகளும் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை காமராஜர் கைப்பந்து குழு செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *