கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகரில் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 13 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் ஓசூர் நகரில் பிரபலமான தேர்ட் ஐ டான்ஸ் கம்பெனியின் மாணவ, மாணவிகளின் கண்கவர் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நடன நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியின் இறுதியாக தேர்ட் ஐ டான்ஸ் கம்பெனியின் உரிமையாளர் ஈரோடு கௌரிஷ் அவர்களுக்கு திண்டுக்கல் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், கவிஞருமான தோழர்.பாலபாரதி அவர்கள் நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *