கோவையில்,பிசியோதெரபி துறை சார்ந்த கல்லூரிகளுக்கு இடையிலான மாநில அளவிலான அத்லெடிக் விளையாட்டு போட்டிகள் அபிராமி பிசியோ கார்னிவல் 2024 எனும் தலைப்பில் நடைபெற்றது.ஸ்ரீ அபிராமி பிசயோதெரபி கல்லூரி மற்றும் தி தமிழ்நாடு எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலைகழகத்துடன் இணைந்து நடைபெற்ற இந்த போட்டிகள் இரண்டு நாட்கள், நேரு ஸ்டேடியம் மற்றும் அபிராமி நர்சிங் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கல்லூரி மாணவ மாணவியர்களிடையே விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் விதமாக நடைபெற்ற இதில் ,சென்னை,மதுரை,திருச்சி, கோவை என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் பிசியோதெரபி கல்லூரி மாணவ,மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கு பெற்றனர்.
அத்லெட்டிக்,உள் மற்றும் வெளி விளையாட்டுகள் என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன.
அத்லெட்டிக் பிரிவில்,100 மீட்டர் முதல் ஆயிரத்து 500 மீட்டர் வரையிலான ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டி எறிதல், தொடர் ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
உள் விளையாட்டு அரங்கில் கேரம்,செஸ் போன்ற விளெயாட்டுகளும்,வெளி விளையாட்டு மைதானத்தில் கோகோ,கபடி,கைப்பந்து,கால் பந்து மற்றும் பூப்பந்து ஆகிய போட்டிகள் நடைபெற்றன.
தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகள் மற்றும் வீரர் வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கும் விழா ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் மண்டப அரங்கில் நடைபெற்றது.
அபிராமி மருத்துவமனை மற்றும் கல்வி குழுமங்களின் தலைவர் டாக்டர் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில்,தமிழ்நாடு எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலைகழகத்தின் துணைவேந்தர் டாக்டர் நாராயணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறந்த அணிகள் மற்றும் வீரர்,வீராங்கனைகளுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பைகளை வழங்கி கவுரவித்தார்.
இதில் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை நந்தா பிசியோதெரபி கல்லூரி மாணவ,மாணவிகள் தட்டி சென்றனர்..
இந்நிகழ்ச்சியில்,அபிராமி மருத்துவமனை மற்றும் கல்வி குழுமங்களின் இயக்குனர்கள் டாக்டர் குந்தவி தேவி மற்றும் மருத்துவர்கள் செந்தில் குமார்,பாலமுருகன்,சுசரிதா,உமாதேவி,மற்றும் அபிராமி பிசியோதெரபி கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெயபாரதி,துணை முதல்வர் முனைவர் குகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்..