தென்காசி,
தென்காசி மாவட்டம் , தென்காசி – கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை ஸ்ரீ முருகன் கோவில் புராண சிறப்பும் வரலாற்றுச் சிறப்பும் உடையதாகும்.
இக்கோவிலில் மாதமாதம் பௌர்ணமி கிரிவலம் நடைபெறுவது. இன்று ஆடி மாத பௌர்ணமியையொட்டி கிரிவலம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள். கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, நோய் நொடியின்றி பக்தர்கள் நலமுடன் வாழ வேண்டும்,உள்நாட்டில் மட்டுமல்லாது அயல்நாட்டில் படிக்கும் இந்திய மாணவர்கள் பாதுகாப்புடன் படித்து முடிக்க வேண்டும்,பயங்கரவாதம் ஒழிந்து பாரத நாடு வளம் கண்டு உலக அரங்கில் வெற்றி வலம் வர வேண்டும்,நாட்டில் நல் மழை பொழிந்து விவசாயம் தழைக்கவும், விவசாயி செழிக்கவும் வேண்டும்,பீடி சுற்றும் பெண்கள் முதல் ஐ டி வேலை செய்யும் பெண்கள் வரை பீடில்லா ஏற்றம் தர வேண்டும், இளைஞர்கள் போதை பாதையில் சென்றிடாது தடுத்து, அனைவருக்கும் உதாரணமாக திகழ்ந்திட வேண்டும், கோர விபத்திலிருந்தும், கொடிய நோயிலிருந்தும் நாட்டு மக்களை காத்து நலமுடன் வாழ வேண்டும் எனவும் ஸ்ரீ முருகனை வேண்டி கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்