“வாழ்த்து” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையிலும், கெளரவ ஆலோசகரும், சமூக சேவகருமான எஸ்.டி.சுப்பிரமணியன், கேட்டரிங் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் எஸ்.ஜெகன், சமூக சேவகி சித்ரா ஆகியோர் முன்னிலையில் நடிகர் கஞ்சா கருப்பு குழந்தைகளை டாக்டர், வக்கீல், போலீஸ் அதிகாரி ஆவதற்கு நன்றாக படிக்க வேண்டும் என்று கூறி வாழ்த்துக்கள் கூறினார்.
அவருக்கு ஒளிப்பதிவாளரும், நடிகருமான பிரேம்ஜி, கருங்காலகுடி சந்துரு, ஆர்.அப்துர் ரஹீம், தலைவர் மீனா, பிரியா மற்றும் கலைக் குழுவில் உள்ளவர்கள் அனைவரும் வாழ்த்துக்கள் கூறினார்கள்.