தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சாலை போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்றது.

பள்ளி ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை நகர போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர் கலா முன்னிலை வகித்தார். தேவகோட்டை போக்குவரத்து காவல் துறை இன்ஸ்பெக்டர் வைரமணி மாணவர்களிடம் பேசும்போது, பள்ளி , கல்லூரி மாணவர்கள் வாகனங்களை 18 வயதுக்கு கீழ் ஓட்டக் கூடாது. அவ்வாறு ஓட்டும் நிலையில் அவர்களுக்கு 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். 3 ஆண்டு சிறை தண்டனையும் உண்டு. 25 வயது வரை வாகனம் ஓட்டுவதற்கு தடை செய்யப்படும்.
உங்கள் பெற்றோர்களிடம் கூறி அனைவரையும் ஹெல்மெட் அணிய செய்யுங்கள். குடித்து விட்டு வாகனம் ஓட்டக்கூடாது என்று உங்கள் வீட்டில் உள்ளவர்களை அன்போடு கேட்டுக் கொள்ளுங்கள். அப்பொழுதுதான் விபத்து இல்லாத சாலை பயணம் ஆகும்.என்று பேசினார்.
மாணவர்களின் பல்வேறு சாலை விதிகள் தொடர்பான சந்தேகங்களுக்கு போக்குவரத்து ஏட்டு யோவா பதில்கள் அளித்தார். நிகழ்வில் எஸ்.எஸ்.ஐ. அஸ்லாமு, காவலர் முத்துவிஜயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நிறைவாக ஆசிரியை முத்துலட்சுமி நன்றி கூறினார்.