தமிழகத்தில் 3 வது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியும்,நியாய விலைக் கடைகளில் வழங்கப்பட்டு வரும் பருப்பு,பாமாயில் பொருட்களை திமுக அரசு நிறுத்த முயற்சி செய்வதாக கூறி
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு அதிமுக அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் தலைமையிலும் அதிமுக பெரம்பலூர் மாவட்ட செயலாளர் இளம்பை இரா.தமிழ்ச்செல்வன் முன்னிலையிலும் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இதில் பேசிய அண்ணா தொழிற்சங்க பேரவை கமலக்கண்ணன் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு 40க்கு 40 அளித்த வெற்றிக்காக மக்களுக்கு தந்த பரிசு தான் மின் கட்டண உயர்வு எனவும்.. தொடர்ந்து வீட்டு வரி உயர்வு சொத்து வரி உயர்வை ஏற்றி மக்களின் அடி வயிற்றில் அடித்து வருவதாக திமுக அரசை குற்றம் சாட்டி விமர்ச்சித்தார்
வரும் 2026 சட்டமன்றதேர்தலில் திமுக அரசிற்கு பொதுமக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என தெரிவித்தார்
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மருதை ராஜா, சந்திர காசி, முன்னாள் அமைச்சரான வரகூர் அருணாச்சலம்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான பூவை செழியன் உள்ளிட்ட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்