அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் 15.பி.மேட்டுபட்டி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், ஒன்றிய குழு தலைவர் பஞ்சு, துணைத் தலைவர் சங்கீதாமணிமாறன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் தீபாநந்தினி மயில்வீரன், வரவேற்றார்.
இந்த முகாமில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வாழ்வாதார கடன் உதவிகள், காவல் துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை உள்ளிட்ட 13 துறைகளை சேர்ந்த அதிகாரிகளின் பல்வேறு சேவைகள் குறித்து தனித்தயாக அரங்கு அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு சேவைகள் வழங்கப்பட்டது.
இதில் அச்சம்பட்டி, பண்ணைகுடி, வாவிடமருதூர், முடுவார்பட்டி, தேவசேரி, ஆதனூர், பெரியஊர்சேரி உள்ளிட்ட சுற்று வட்டார பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை வழங்கினர். பேரூராட்சி தலைவர் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், துணை தலைவர் சாமிநாதன், யூனியன் ஆணையாளர் வள்ளி, வட்டாட்சியர்கள் ராமச்சந்திரன், பார்த்திபன், மற்றும் திமுக கிழக்கு ஒன்றிய பொருளாளர் சுந்தர், திமுக ஒன்றிய துணைச் செயலாளர்கள் ராஜேந்திரன் அருண்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தனுஷ்கோடி, முன்னாள் பேரூர் துணைச் செயலாளரும் தொழிலதிபருமான கண்ணன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்
சந்தனகருப்பு, சோழவந்தான் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் தண்டலை தவசதீஷ், மற்றும் அரசு துறைஅலுவலர்கள் கலந்து கொண்டனர்.