கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் பர்கூர் குறுவட்ட அளவிலான உயர்நிலை மேல்நிலை மற்றும் மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகளுக்கான சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் குட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் சி.பெருமாள் தலைமை தாங்கினார், பள்ளி தலைமை ஆசிரியர் லட்சுமி வரவேற்பு உரை ஆற்றினார்,
பள்ளி ஆசிரியர்கள் நிர்மலா, ஜெய்சங்கர், சிலம்பரசன், நாகராஜ், சின்னபையன், ஆய்வக உதவியாளர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே. மதியழகன் எம் எல் ஏ கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி மாணவ- மாணவிகளுக்கான போட்டிகளை துவக்கி வைத்தார்.
மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், ஒன்றிய கழக செயலாளர் அறிஞர், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சக்தி, மாவட்ட கலை இலக்கிய அணி பாலாஜி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சேகர், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேஸ்வரா, ஜெகதீசன், கல்வியாளர் பேராசிரியர் செந்தில், பள்ளி மேலாண்மை குழு தலைவி சத்யா, துணை தலைவி வளர்மதி உள்பட குட்டூர் இளைஞர்கள், முன்னாள் மாணவர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.