கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு மகளிர் கலைக்கல்லூரி ஆகியவை இணைந்து உலக போதை எதிர்ப்பு தினத்தையொட்டி, மாவட்ட அளவிலான போதை விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் கீதா தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (பொறுப்பு) சுபாஷ்,அகரம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் சுவார்டு நிறுவன தலைவர் அறிவளி இராமமூர்த்தி சிறப்புரை ஆற்றினார்.
இந்த கருத்தரங்கில் தற்போது மொபைல்போன்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. 5 மாவட்டத்தில், ஏழாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களிடம் நடத்திய சர்வேயில், மொபைல் போன்களால் கடும் பாதிப்பு ஏற்படுவதாக அறிவித்துள்ளனர். மொபைல் போன்களால் மாணவர்களுக்கு என்ன பிரச்சனை வருகிறது, என்ன நடக்கிறது என்பதே தெரிவதில்லை. பள்ளிக்குழந்தைகள் பலர் மொபைல் போனுக்கு அடிமையாகிவிட்டனர். இதனால் உடல் நலம் பாதிப்பு, மூளை வளர்ச்சி பாதிப்பு, மன நலம் பாதிப்புகளால் மாணவர்கள் தவிக்கின்றனர். இதை நாம் தெரிந்தே செய்கிறோம். இது குறித்த விழிப்புணர்வு வேண்டும் . குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமை, குழந்தை திருமணம் போன்றவை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதைப் பொருட்கள் மற்றும் மொபைல் போன் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும். போதைப் பொருள் விற்பனை குறித்து நீங்கள் தகவல் தெரிவிக்க விரும்பினால், 1098 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தவறான நடத்தையால், செயலால் உங்கள் எதிர்காலம் பாதிக்கிறது. எனவே வரும் காலத்தில் நாம் நல்ல சமுதாயத்தை உருவாக்க பாடுபடுவோம். என எடுத்துரைக்கப்பட்டது.இந்த நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் கலை மாமணி பழனியாபிள்ளை அவர்கள் சிறந்து பணியாற்றிய சுவார்டு தொண்டு நிறுவனத்திற்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தனர்