தேனி மாவட்டம் கம்பம் ராம் ஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மாணவ மாணவிகளுக்கு சிறப்பு கண் சிகிச்சை முகாம்

தேனி மாவட்டம் கம்பம் ராம் ஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி என்பது தேனி மாவட்டம் மற்றும் கம்பம் இதனை சுற்றியுள்ள ஏராளமான கிராம பகுதிகளில் உள்ள பொதுமக்களின் நன்மதிப்பை பெற்ற கல்வி நிறுவனமாகும் மேலும் இங்கு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கல்வியை சிறந்த முறையில் போதிப்பது மட்டுமில்லாமல் பல்வேறு சமுதாய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குறிப்பாக மரக்கன்றுகள் நடுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டாலும் மாணவ மாணவிகளின் உடல் நிலையும் நலமாக இருக்க வேண்டுமென நினைக்கும் ஒரே கல்வி நிறுவனம். ராம் ஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது இதன் படி மாணவ மாணவிகளின் நலன் கருதி மனிதனின் முக்கிய உறுப்பான கண் சிகிச்சை அனைவருக்கும் அளிக்க வேண்டுமென பள்ளி மேனேஜிங் டைரக்டர் கே ஆர் சௌந்தர்ராஜன் உத்தரவிட்டுள்ளார் இதன்படி கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து கண் சிகிச்சை முகாம் பள்ளி மாணவ மாணவிகள் அங்கு பணியாற்றும் ஆசிரியைகள் அனைத்து பணியாளர்கள் பள்ளி பேருந்தை இயக்கம் டிரைவர்கள் கண்டக்டர்கள் என ஊழியர்கள் பாகுபாடு பார்க்காமல் அனைவரும் சமத்துவம் என்ற அடிப்படையில் அனைவருக்கும் கண் சிகிச்சை முகாம் வெகு சிறப்பாக நடைபெற்றது

இந்த முகாமில் தேனி அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும். கண் சிகிச்சை செய்து சிறப்பாக இந்த முகாமை நடத்தினார்கள்.

மேலும் நமது உடல் உறுப்புகளில் கண் மிகவும் முக்கியமான கருவியாகும் கண் பார்வை இல்லை என்றால் வெளி உலகமே தெரியாமல் ஏல்லாம இருட்டாக இருப்பது போல் தெரியும் எனவே இந்த முகாமில் கண் பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் கண்புரைகள் இருந்தால் அறுவை சிகிச்சை செய்து கொள்ள தேனி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு வருவதற்கு உண்டான ஆணை கண்ணுக்கு ஏற்ற பவர் கிளாஸ் மற்றும் மற்றும் கண் கண்ணாடிகள் போன்றவைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

இந்த முகாமில் கே. ஆர். எஸ்.ராம் ஜெயந்த் ஐ டி ஏ எஸ் ஜாயிண்ட் கமிஷனர் பள்ளி மேனேஜிங் டைரக்டர் கே .ஆர். சௌந்தரராஜன். தாளாளர் கவிதா சௌந்தர்ராஜன் தலைமை வகித்து பள்ளி முதுநிலை முதல்வர் R.சுவத்திகா. இளநிலை முதல்வர் எஸ் கயல்விழி ஆகியோர் முன்னிலையில் இந்த முகாம் வெகு சிறப்பாக நடைபெற்று நிறைவடைந்தது பள்ளி மேனேஜிங் டைரக்டர் கே ஆர் சௌந்தர்ராஜன் முகாமில் பங்கேற்ற அனைவரையும் கனிவுடன் வரவேற்று உபசரித்து அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பள்ளி நிர்வாகம் சார்பில் செய்யப்படும் என உறுதி அளித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *