ஜி. டிஎன் கல்லூரி தாளாளர் டாக்டர் அரிமா லயன் ரெத்தினம், கல்லூரி இயக்குனர் முனைவர் துரை ரத்தினம் அவர்களின் வழிகாட்டுதலில், கல்லூரி முதல்வர் முனைவர். சரவணன் அவர்களின் வழிகாட்டுதலுடன் சமூகப்பணித்துறை சார்பில் திண்டுக்கல் அருகில் உள்ள முள்ளிப்பாடி ஊராட்சியில் இருக்கும் கோடங்கிநாயக்கன்பட்டி கிராமத்தில் இயற்கை விவசாயம் மற்றும் பருவ கால விவசாய முறை விளக்கப் பயிற்சி சார்ந்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சமூகப்பணித்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ராஜா வரவேற்புரை மற்றும் உணவு முறைகள், இயற்கை விவசாய விவசாய முறைகள் பற்றி கருத்துரை வழங்கினார். முள்ளிப்பாடி ஊராட்சி மன்றத் தலைவர் மாதவி காமராஜ் தலைமை தாங்கினார், முள்ளிப்பாடி ஊராட்சி மன்ற செயலாளர் வசந்த் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக விசுவாசம் மற்றும் லீமா ரோஸ் மரியா கலந்து கொண்டு விவசாயிகளுக்கு விளக்கப் பயிற்சி அளித்தனார்.சமூகப்பணித்துறை தலைவர் ரெஜினா, பருவ கால விவசாய முறைகள் பற்றி பேசினார்.
மேலும் சமூகப்பணித்துறை உதவிப் பேராசிரியர்கள் ஹரிஷா, பாலகோமளா, கதிரவன், சாலிமா கருத்துரை வழங்கி சிறப்பித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சமூகபணித்துறை
இளங்கலை மாணவர்கள் சுவாதி, ரூபன், லட்சுமணன், சந்தோஷ், யுவான், அருண், ஹரிகரன், சந்தோஷ், ரஞ்சன் ஆகியோர்கள் செய்தனர். சிறப்பு விழிப்புணர்வு நிகழ்வில் பங்கு பெற்று சிறப்பித்த அத்தனை விவசாய பெருங்குடி மக்களுக்கும் உணவு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
இறுதியில் சமூகப்பணித்துறை மாணவி சுவாதி நன்றி தெரிவித்தார்.