பெரியகுளம் ஒன்றிய பகுதிகளில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் ஊராட்சி மன்ற தலைவர் பொதுமக்களுக்கு நோட்டீஸ் வழங்கி முகாமில் பங்கேற்க அழைப்பு தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட முதலாக்கம்பட்டி எருமலை நாயக்கன்பட்டி குள்ளபுரம் ஏ. வாடிப்பட்டி பூமி நாயக்கன்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு குள்ளபுரம் பிரதான வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது
இந்த முகாமில் பங்கேற்று கிராம மக்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளை மனுவாக வழங்கி பயன்பெறுமாறு ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் எருமலைநாயக்கன்பட்டி ஏ பால்ராஜ் குள்ளபுரம் எஸ் மஞ்சுளா தேவி ஏ வாடிப்பட்டி ஜெயராம் பொம்மிநாயக்கன்பட்டி சம்சுல் குதா ரபிக் முதலக்கம்பட்டி பிரபா மருது பாண்டியன் ஆகியோர் அந்தந்த கிராம ஊராட்சிகளில் பொது மக்களுக்கு நோட்டீஸ் வழங்கி முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு அழைப்பு விடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் அனைத்து ஊராட்சி மன்ற செயலாளர்களும் பங்கேற்றனர்