புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி மாநிலம் தழுவி ஆர்ப்பாட்டம்.
கடலூரில் தமிழ்நாடு அரசின் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி நியாய விலை கடைகளில் பாமாயில் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு இன்றி வழங்க கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம் பட்டுசாமி மாவட்ட செயலாளர் தலைமையில் பாலகிருஷ்ணன் தமிழரசன் முன்னிலையில் மாநில செயற்குழு உறுப்பினர் கலியமூர்த்தி மாநில குழு உறுப்பினர்கள் சம்பந்தம்,
அறவாழி சுந்தர்ராஜா, சசிகுமார், பிருதிவிராஜ், மாநகர செயலாளர் ஏழுமலை, சதீஷ், ராஜா ராமன் உள்ளிட்டோர் விளக்க வுரை ஆற்றிட மத்திய அரசே மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறு, நுகர்வோர் குறையீட்டு எண்ணுக்கு ஏற்ப மின் கட்டணத்தை உயர்த்தும்படி மாநில அரசுகளை நிர்பந்திக்காதே, தமிழக அரசே நியாய விலை கடைகளில் பாமாயில், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி வழங்கு.
தேர்தல் வாக்குறுதியின் படி மாதந்தோறும் மின் அளவு கணக்கெடுக்கும் முறையை நடைமுறைப்படுத்து..
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.