திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்தில் ஆதிச்ச மங்கலம், மாணிக்க மங்கலம், அரித்துவார மங்கலம், வீரமங்கலம் உள்ளிட்ட 50 கிராம ஊராட்சிகளிலும் ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் கலைஞர் கனவு இல்லம் 2024-25 திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்து அங்கீகரிப்பதற்கான சிறப்பு கிராம சபை கூட்டங்கள் முறையே கடந்த ஜுன் மாதம் 30-ம் தேதியும் மற்றும் கடந்த 13-ம் தேதியும் நடைபெற்றது.
வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் கலைஞர் கனவு இல்லம்
2024-25 திட்டத்தின் கீழ் முன்னதாக 99 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அதனை அடுத்து 165 பயனாளிகள் இரண்டாவது கட்டமாக தேர்வு செய்யப்பட்டனர்.
இதன் மூலம் 264 பயனாளிகள் இறுதி செய்யப்பட்ட நிலையில் மேலவிடையல் ஊராட்சி, பாப்பாக்குடி ஊராட்சி, அரித்துவாரமங்கலம் ஊராட்சி, கோவிந்தகுடி ஊராட்சி, மணலூர் ஊராட்சி ஆகிய ஜந்து ஊராட்சிகளில் மண்டல வாரியாக 50 கிராம ஊராட்சிகளையும் இணைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வலங்கைமான் வட்டார வளர்ச்சி அலுவலர் முரளி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) செந்தில் ஆகியோர் கலைஞரின் கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கு வேலை உத்தரவு ஆணையினை நேரில் வழங்கினர்.