தென்காசி மாவட்டம் தென்காசி ஒருங்கிணைத்த மாவட்ட திமுக சார்பாக தமிழ்நாட்டிற்கு நிதி தராத மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தென்காசி மாவட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் தென்காசி தெற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களின்சார்பாக தமிழக அரசிற்கு மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்காத ஒன்றிய அரசை கண்டித்து கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வே ஜெயபாலன் தலைமையில் வடக்கு மாவட்ட செயலாளர் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ராஜா தென்காசி நகர மன்ற தலைவர் நகரச் செயலாளர் சாதிர் முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லத்துரை மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் டி ஆர் கிருஷ்ணராஜாமாவட்ட அவை தலைவர் சுந்தர மகாலிங்கம் தென்காசி ஒன்றிய குழு தலைவர் ஷேக் அப்துல்லா மாவட்ட பொருளாளர் எம் எம் ஏ ஷெரிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

ஆர்ப்பாட்டங்களை துவக்கி வைத்து பேசிய தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ராணிஸ்ரீ குமார் கூறும் போது ஒன்றிய அரசிற்கு தமிழகத்திற்கு எந்த ஒரு நிதியும் தராத நிலையில் தனக்கு ஆதரவு அளித்த பீகார் மற்றும் ஆந்திர பிரதேஷ் அரசாங்கத்திற்கு அள்ளி கொடுத்திருப்பது வருந்த தக்கது என்றும் மாநிலங்களை மாற்றான் தாய் போக்குடன் செயல்படுத்தும் நிதி அமைச்சரை கண்டித்து தமிழக அரசு ஒன்றிய அரசுக்கு அதிகப்படியான ஜிஎஸ்டியை கொடுத்தும் தமிழகத்திற்கு கொடுக்கும் திட்டங்கள் பூஜ்ஜியம் என்றும் கூறினார் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களும் கோஷங்களும் ஒன்றிய அரசுக்கு எதிராக எழுப்பப்பட்டன

இக்கூட்டத்தில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ் எம் ரஹீம் சாமிதுரை எஸ் கே முத்துப்பாண்டி திமுக ஒன்றிய செயலாளர் வல்லம் திவான் ஒலி அழகு சுந்தரம் ஜெயக்குமார் மற்றும் பேரூர் செயலாளர் ராஜராஜன் தங்கப்பா என்ற உசேன் கிளைச் செயலாளர்கள் முத்துக்குமார் ராசா ஆர் கே செல்வம் முருகேசன் சிவன் பாண்டியன் ஈஷா முகமது கனி திருமலாபுரம் முருகன் பார்டர் ராமையா மணலூர் திவான் ஒலி மாவட்ட அணி நிர்வாகிகள் வடகரை சபிக் அலி மங்கள விநாயகம் கரிசல் வேல்சாமி வெல்டிங் மாரியப்பன் ராமராஜன் அலகு சங்கர் மற்றும் நிர்வாகிகளான இசக்கி பாண்டியன் செல்வ விநாயகம் கனி முருகன் அபூபக்கர் சித்திக் பண்பொழி இசக்கி வவுதார் ஒன்றிய குழு உறுப்பினர்கள் வினோதினி கலாநிதி ஆகியோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் இறுதியில் மாநில செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி நன்றி உரையாற்றினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *