கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 25வது கார்கில் வெற்றி தின விழா அனுசரிக்கப்பட்டது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கர்னல் ஜே. எம். ஜோஷி (காமாண்டிங் ஆபீஸர், 5 தமிழ்நாடு என்.சி.சி) கலந்து கொண்டு சிறப்பித்தார். அவர் தனது உரையில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் மூலம் கார்கில் போர் பற்றிய வரலாற்றை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

இராணுவ வீரர்கள் என்பவர்கள் வெற்றுக் காசோலை போன்றவர்கள். போர் முனையில் எப்பொழுது வேண்டுமானாலும் அவர்களது உயிர் எடுத்துக் கொள்ளப்படும் என உருக்கமாகக் குறிப்பிட்டார்.

கார்கில் போரில் தன் உயிர் நண்பனை தனது கண்முன்னே பறி கொடுத்த நினைவுகளை சுபேதர் மேஜர் பரத்சிங் மாணவர்களுடன் உருக்கமாகப் பகிர்ந்து கொண்டார்.

போர் அனுபவங்கள், தாக்கங்கள் மற்றும் இழப்புகள் பற்றியும், மாணவர்கள், ஆசிரியர்களது கேள்விகளுக்கும் கர்னல் ஜே. எம். ஜோஷி மற்றும் சுபேதர் மேஜர் பரத்சிங் ஆகியோர் பதிலளித்து கலந்துரையாடினர்.

முனைவர். நா. மரகதம், முதன்மையர், மாணவர் நல மையம் அவர்கள் தனது வரவேற்புரையில் தனது தந்தையின் இந்தியா – பாகிஸ்தான் போர் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

தனது இஸ்ரேலியப் பயணத்தின் போது இஸ்ரேலிய விஞ்ஞானிகளின் கண்ணோட்டத்தில் கார்கில் போர் எவ்வாறு காணப்பட்டது என்பதை பற்றிய நினைவுகளை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

இந்நிகழ்வையொட்டி நடைபெற்ற பேச்சுப்போட்டி, கவிதைப் போட்டி மற்றம் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழும் மற்றும் பரிசுகளும் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மேஜர். முனைவர். எஸ். மனோன்மணி, என்.சி.சி அதிகாரி அவர்கள் நன்றியுரை நல்கிட விழாவானது இனிதே நிறைவுற்றது,மாணவர் நல மையம் இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. நூற்றுக்கணக்கான மாணவர்களும், பேராசிரியர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *