மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவிலில் ஆடி மாத வெள்ளிக்கிழமை 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
முன்னதாக அங்குள்ள விநாயகர், முருகன், லட்சுமி ஹயக்ரீவர், காலபைரவர், சாய்பாபா, நவக்கிரகங்கள், உள்ளிட்ட சன்னதிகளில் 16 வகையான சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு பூஜை மலர்களும் பிரசாதமும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சீனிவாசன் தலைமையில் திருப்பணி குழுவினர், ஐயப்பன், முருக பக்தர்கள் செய்திருந்தனர்.