திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கலாம் கண்ட கனவு அறக்கட்டளை மற்றும் அன்பால் அறம் செய்வோம் சேவைக் குழு சார்பில் மறைந்த டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளையொட்டி அகஸ்தியா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் திட்டம் நடைபெற்றது. நிகழ்விற்கு பள்ளி முதல்வர் பாக்கியலட்சுமி தலைமை தாங்கினார்.

கலாம் கண்ட கனவு அறக்கட்டளை நிறுவனர் கேசவராஜ் பங்கேற்று கலாம் கண்ட இந்திய கனவுகள் பற்றி சிறப்புரை ஆற்றினார். மேலும்
அன்பால் அறம் செய்வோம் நிறுவனர் அசாருதீன் பசுமையான இந்தியா என்ற தலைப்பில் மாணவர்களுடன் உரையாடல் நிகழ்த்தினார்.

நிகழ்வின் இறுதியில் பள்ளி வளாகத்தில் மாணவர்களுடன் இணைந்து மரக்கன்றுகள் நடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *