உணவே மருந்தாகும் படி உற்பத்தி செய்யும் தொழில் நுட்பங்கள் குறித்த கருத்தரங்கம் மற்றும் கருத்துக் காட்சி;-
வேளாண்மை இணை இயக்குநர் அழைப்பு:-
தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) கனகம்மாள் அவரது செய்தி குறிப்பில்;-
நஞ்சற்ட உற்பத்தி செய்து உணவே மருந்தாகும்படி உற்பத்தி செய்யும் தொழில் நுட்பங்கள் குறித்த கருத்தரங்கம் மற்றும் கருத்துக் காட்சி வரும் 31/07/2024 புதன் கிழமை ஊர் மேலழகியான் கிராமத்தில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண்மைத்
துறை மூலம் மாவட்ட ஆட்சியர் தலைமையில்
சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைப்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் வேளாண்மை, தோட்டக்கலை, விற்பனை வேளாண்மை, பொறியியல்,மற்றும் உயிர்ம இடுபொருட்கள், உற்பத்தியாளர்களின் இடுப்பொருட்கள் கண்காட்சி நடைபெறும்
நமது மாவட்ட விவசாயிகள் இச் சிறப்பு நிகழ்வுகளில் பங்கு பெற்று பயன்பெறதென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அழைப்பு விடுத்துள்ளார்