விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின் கட்டண உயர்வை தமிழக அரசு ரத்து செய்ய வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் அய்யணன் தலைமையில் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொ. லிங்கம் விளக்க உரையாற்றினார். மேலும் ஒன்றிய செயலாளர் கணேச மூர்த்தி, ஒன்றிய துணைச் செயலாளர் வழக்கறிஞர் பகத்சிங், மாவட்ட குழு வரதராஜன் உள்பட ஏராளமான பங்கேற்று கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். சிறு குறு தொழிலை பாதுகாக்க மின் கட்டண உயர்வை ரத்து செய்யவும், மின் விநியோகத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் செயலை கைவிடக் கோரியும், மின் கட்டண உயர்வு உடனடியாக ரத்து செய்யவும், விவசாயத்தை பாதுகாக்க தடையில்லா இலவச மின்சாரம் வழங்கவும், ஒன்றிய அரசின் மின்சார விதிமுறைகளுக்கு அடிபணியாமல் மின்கட்டண உயர்வு ரத்து செய்யக் கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏராளமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் பங்கேற்று கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.