பெரியகுளம் அருகே மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் எம்எல்ஏ ஆய்வு தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது
இந்த முகாமில் கீழ வடகரை அழகர் நாயக்கன்பட்டி ஜி கல்லுப்பட்டி எண் டப் புளி ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட கிராம பொதுமக்கள் மக்களுடன் முதல்வர் முகாமில் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்குமாறு மனு கொடுத்து பயன்பெற்றார்கள்
இந்த சிறப்பான முகாமை பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் பார்வையிட்டு முகாமில் பங்கேற்ற பொது மக்களிடம் குறைகளை கேட்டு அதனை நிவர்த்தி செய்யுமாறு மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமில் பங்கேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்
இந்த முகாமில் பெரியகுளம் ஒன்றிய குழு பெருந்தலைவர் தங்கவேல் கீழ வடகரை ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி செல்வராஜ் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சி செயலாளர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.