கோவையில் ஆகஸ்ட் 4 ந்தேதி மாபெரும் இலவச செயற்கை மூட்டு வழங்கும் முகாம்

நாராயண் சேவா சன்ஸ்தான் சார்பாக நடைபெற உள்ள இதில் தமிழகம்,கேரளா,கர்நாடகா என பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்க உள்ளதாக அமைப்பினர் தகவல்

இராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் செயல்பட்டு வரும் நாராயண் சேவா சன்ஸ்தான் எனும் அமைப்பு இந்தியா மட்டுமின்றி ஆப்ரிக்க நாடுகளிலும். மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை கால் மற்றும் கைகளை இலவசமாக பொருத்தும் முகாம்களை நடத்தி வருகின்றனர்…

இந்நிலையில் தமிழகத்தில் முதன் முறையாக கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் மற்றும் கைகள் அமைப்பதற்கான அளவீடு எடுக்கும் முதல் கட்ட முகாம் கோவையில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது.

இந்நிலையில் இதனை பயனாளிகளுக்கு பொருத்துவதற்கான இரண்டாம் கட்ட முகாம் வரும் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது..

இதில் நாராயண் சேவா சன்ஸ்தான் அமைப்பின் மீடியா மற்றும் மக்கள் தொடர்பு இயக்குனர் பகவான் பிரசாத் கவுர், மகேஸ்வரி பவன் செயலாளர் சந்தோஷ் முண்டாடா, சமூக ஆர்வலர் கமல் கிஷோர்,ஹரி பிரசாத் லட்டா ,பெங்களூர் ஆஸ்ரம் கூபி லால் மெனாரியா ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்…

கோவையில் முதன்முறையாக 638 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நாராயண் லிம்ப் அணிவித்து மாற்றுத்திறனாளகளுக்கு புதிய வாழ்வு அளிக்கும் வகையில் இந்த நிறுவனம் செயல்படவுள்ளது என்றார்.

சுயமாக செயல்பட முடியாமல் இருப்பவர்களை,
தன்னம்பிக்கையுள்ளவர்ளாக
மாற்றி சமூகத்தில் சமமாக செயல் படும் விதமாக, இந்த முகாமை நடத்துவதாக தெரிவித்தனர்..

இந்த முகாம் கோவை தடாகம் சாலை இடையர்பாளையம் பகுதியில் உள்ள மகேஸ்வரி பவன் மண்டபத்தில் நடைபெற உள்ளதாக தெரிவித்தனர்.. இந்த முகாமை நடத்த உள்ளூரில்,
15 க்கும் மேற்பட்ட சமூக அமைப்புகள் உதவ முன் வந்துள்ளதாகவும் தெரிவித்தனர்..

முன்னதாக நிகழ்ச்சியில் முகாம் குறித்த விழிப்புணர்வு போஸ்டர் வெளியிடப்பட்டது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *