பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட ரெங்கா நகர் 1வது வார்டு பகுதியில் முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குடிநீரானது 22 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வருவதாகவும், அவ்வாறு வரும் தண்ணீர் அரைமணி நேரத்திற்கு மேல் வருவதில்லை எனவே இதற்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்றும் அவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனால் அப்பகுதியில் வழிநெடுக வாகனங்கள் அணிவகுத்து நின்ற நிலையில்,சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.