செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.
திருவண்ணாமலை மாவட்ட சமூக நல அலுவலகம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து நடத்தும் இலவச தையல் கலை பயிற்சி வந்தவாசி முகமது இஸ்மாயில் நினைவு கல்வி அறக்கட்டளை நிறுவனத்தில் இன்று தொடங்கப்பட்டது.
பெண் குழந்தைகளை காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்
என்ற கொள்கையின் அடிப்படையில் 25 பெண்களுக்கு, 45 நாட்களுக்கான இலவச தையல் பயிற்சிக்கான பயிற்சி புத்தகத்தை தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் இயக்குனர் தியாகராஜன் மாணவிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்,
நிகழ்விற்கு அறக்கட்டளை தலைவர் பீ.ரகமத்துல்லா தலைமை தாங்கினார், தாளாளர் ஆசியா பர்வின் வரவேற்றர், மாவட்ட துணை பயிற்சி அலுவலர் சாம்ராஜ் உடன் பங்கேற்றார்.