செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி

தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் நேற்று மாவட்டத் தலைவர்
கு. வெங்கடேசன் தலைமையில், மாவட்டச் செயலாளர் வடிவேல் அவர்கள் முன்னிலையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தை சார்ந்த ஆரணி வட்டக் கிளை முன்னணி தோழர்கள் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தில் இணைந்தனர்.
மேலும் விரைவில் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் ஆரணியில் துவங்க முடிவெடுத்துள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் கேப்டன் மு.பிரபாகரன் சிறப்புரை நிகழ்த்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் மு.வாசு. மாவட்ட போராட்டக் குழு தலைவர்B.கணபதி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ராணி, மற்றும் சேத்துப்பட்டு வட்டக் கிளை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் வருகிற
07/ 08 /2024 அன்று அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும், மேலும் அண்மையில் உயிர் நீத்த ஆரணி சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் திருமலை அவர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. நிறைவாக மாவட்ட பொருளாளர் பிரகாஷ் நன்றி கூறினார்.