தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக சார்பில் மதிமுக 31-வது ஆண்டு துவக்கவிழா, பாராளுமன்ற தேர்தல் வெற்றி விழா கீழப்பாவூர் ஒன்றிய பகுதியில் கொண்டாடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஆவுடையானூர் பேருந்து நிலையம் அண்ணா திடலில் கொடியேற்று விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக செயலாளர் இராம உதயசூரியன் தலைமை வகித்தார். வைஃபை தணிக்கைகுழு உறுப்பினர் சுரண்டை இராமகிருஷ்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.எம். வேதநாயகம், மாவட்ட அவைத்தலைவர் தென்காசி என். வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக குமரி மாவட்ட செயலாளரும், உயர்நிலைகுழு உறுப்பினருமான வழக்கறிஞர் வெற்றிவேல், மாநில மதிமுக துணைப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் திருமலாபுரம் தி.மு.இராசேந்திரன் ஆகியோர் விளக்கி பேசினார்