பாபநாசம் செய்தியாளர் ஆர் .தீனதயாளன்
ராஜகிரி மைதீன் மருத்துவமனை மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் என ஜமாஅத் நிர்வாகிகள் உறுதி..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே
ராஜகிரி மைதீன் மருத்துவமனை மீண்டும் இயங்கும் பாபநாசம் வட்டார சுன்னத் ஜமாஅத் நிர்வாகிகள் கூட்டத்தில் தொழிலதிபர் முகம்மது யஹ்யா உறுதியளித்தார்.
இந்நிகழ்ச்சியில்பாபநாசம் வட்டார சுன்னத் ஜமாஅத்தலைவர். யூசுப் அலி செயலாளர் சாதிக் பாட்சா பொருளாளர் சிம்லா நஜீப், துணைத் தலைவர் பசீர் அகமது, துணைச் செயலாளர் முகம்மது ஆரிப் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.