தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே வடகரை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் விவசாயிகள், சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். இதனால் சிறுத்தையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

செங் கோட்டை அருகே உள்ள வடகரையில் இருந்து அடவிநயினார் நீர்த்தேக்கம் செல்லும் சாலையில் உள்ள சம்போடை பகுதியில் நேற்று முன்தினம் பகலில் சிறுத்தை ஒன்று நடமாடியள்ளது.

இதனால் தோட்டங்களுக்கு சென்ற விவசாயிகள் சிறுத்தையை நேரில் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக வீடு திரும்பினர்.

சிறுத்தை நடமாட்டத்தை அங்குள்ள இளைஞர்கள் தங்களது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் சிறுத்தை நடமாட்டம் தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட் டது. அதன்பேரில் நேற்று கடையநல்லூர் வனச் சரக அலுவலர் சுரேஷ் தலைமையில் மேக்கரை பிரிவு வனவர் முருகேசன் மற்றும் வனக்காப்பாளர் ஜோஸ்வா, செல்லத்துரை, சுகந்தி வனக்காவலர் மாணிக்கம் வேட்டை தடுப்பு காவலர் மலைச்சாமி ஆகியோர் சிறுத்தை நடமாட்டம் குறித்து கண்காணித்தனர்.

தொடர்ந்து சப்தம் எழுப்பி வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் வெளியே வராதவாறு தடுக்கும் பணியை மேற்கொண்டனர்.

மேலும் மேக்கரை மற்றும் வடகரை பகுதிகளில் வன விலங்குகள் நடமாட்டம் உள்ளதால் கவனமாக செல்லும் படி வனத்துறை சார்பில் விழிப்புணர்வு பலகை வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே குற்றாலம், ஐந்தருவி வனப்பகுதியில் ஒற்றை யானை நடமாட்டம் இருந்த நிலையில் அதனை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் வெடி வெடித்து விரட்டி உள்ளனர். தற்போது மேக்கரை மற்றும் வடகரை பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் தொடங்கியுள்ளதால் விவசாயிகள், சுற்றுலாபய ணிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந் துள்ளனர்.

தற்போது சீசன் காலம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் மேக்கரை பகுதிகளில் உள்ள தனியார் அருவிப்பகுதிகளில் குளிக்க சென்ற வண்ணம் உள்ள னர். எனவே சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக வனப்பகு தியில் இருந்து வெளியே வந்துள்ள சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொது மக்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *