வலங்கைமான் அருகே உள்ள கீழஅமராவதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வயநாட்டில் பேரிடரால் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலியைமாணவர்கள் செலுத்தி, உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள கீழ அமராவதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மாணவர்கள் கேரள மாநிலம் வயநாட்டில் பேரிடரால் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து இனியாவது விழிப்புணர்வு கொள்வோம், வருமுன் காப்போம், இப்படி ஒரு துயர நிகழ்வு நடக்காமல் தவிர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுப்போம் என்று உறுதிமொழி எடுத்தனர்.
இந்நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர் ஆர். ஆனந்தி,உதவியாசிரியர் கோ. பாலசுந்தரம் ஆகியோர் உடன் இருந்தனர்.