மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், யா.ஒத்தக்கடை தொடக்கப்பள்ளியில் கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
நிலச்சரிவு பாதிப்புகள், அதனால் உயிரிழந்தவர்கள், அவர்கள் குடும்பத்தினர் பற்றி ஆசிரியர் ரமா பிரபா எடுத்துரைத்தார்.
நிலச்சரிவில் பலியானவர்களுக்குபள்ளி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மாலா, மோசஸ் மாணவர் முகமது யூசுப் செய்திருந்தனர்