திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள அத்திக்கடை ஸ்ரீ கண்தந்த மாரியம்மன், துர்கா சரஸ்வதி அம்மன், அஷ்டலட்சுமி, பிடாரியம்மன், வராகி அம்மன் ஆலயத்தில் பொதுமக்கள் நன்மை வேண்டி ஸ்ரீ சண்டி மகா யாகம் நடைபெற்றது. காலை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, ஸ்ரீ லலிதா ஹோமம் உள்ளிட்டவை முடிந்து சண்டியாகம் துவங்கியது. நெய், பழங்கள், பட்டுப் புடவைகள் உள்ளிட்ட ஓம பொருட்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு யாக குண்ட தீயிலிடப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பிரம்மச்சாரி, கன்யா, வடுக பூஜைகள் நடைபெற்றது. மாலை அம்பாள் வெளிப்பிரகார புறப்பாடு நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை அத்திக்கடை , பஞ்சநதிக் குளம் கிராம வாசிகள் செய்திருந்தனர்.