திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பவான்ஸ் பள்ளியின் வளாகத்தில் அனுமதி இல்லாத கடைகள்..
மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை..
தெளிந்த நீரோடையாகச் செல்லும் ஆற்றுவெளியில் கான்கிரீட் கொண்டு அமைக்கப்படும் கடைகளால் எதிர்காலத்தில் வயநாடு போன்ற நிலை ஏற்படலாம்..
பள்ளி மைதானங்களில் தண்ணீர் சூழும் நிலை ஏற்படலாம்..
முளையிலெயே கிள்ளி எறிய வேண்டிய தருணம் இது.
அமைதிப்பள்ளத்தாக்கு பகுதியில் நீண்டகாலமாக கடை வைத்துள்ளவர்கள் விதிகளை மீறவில்லை. மிகமிக தூய்மையாக வைத்திருந்தனர்..
ஆனால் ஆற்றுவெளியில் அமைக்கப்பட்ட கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.ஆற்று நீர் சுகாதாரமற்ற சூழ்நிலையில் மாசு அடைகின்றன.இதனை
மாவட்ட ஆட்சியர்,கோட்டாச்சியர்,வட்டாச்சியர்,நெடுஞ்சாலைத்துறை அலுவலர்,மின்வாரிய அதிகாரிகள்,நகராட்சி ஆணையர் உடனே தலையிட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ள ஆற்றோரம் கட்டபட்டுள்ள கடைகளை அகற்ற வேண்டும்..
ஆற்றோரங்களில் இனி கடைகள் நடத்த கூடாது என்ற அறிவிப்பினை உடனடியாக செய்தல் வேண்டும் என ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.