எஸ் செல்வகுமார். செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள உள்நாட்டு மீனவர்களுக்கு அரசு நிவாரண உதவி வழங்கிட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்று கரையோரம் ஆற்றங்கரை தெரு பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட உள்நாட்டு மீனவர்கள் குடும்பத்தினர்கள் வசித்துவருகின்றனர்.
இவர்கள் சிறிய படகுகள் மூலம் கொள்ளிடம் ஆற்றில் நாள்தோறும் வலைகள் விரித்து மீன்பிடிதொழில் செய்து அவ்வாறு கிடைக்கும் மீன்களை கொள்ளிடம் சோதனைசாவடி அருகேயுள்ள மீன் விற்பனை கூடத்தில் வியாபாரம் செய்து வரும் வருவாயில் குடும்பம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ள வெள்ளத்தால் உள்நாட்டு மீனவர்கள் கடந்த 1வாரமாக கொள்ளிடம் ஆற்றில் மீன்பிடித்தொழிலுக்கு செல்லமுடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதனால் உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திட்டு கிராமங்களுக்கு அரசு நிவாரணம் வழங்கியதுபோல் தங்களுக்கும் நிவாரண உதவி வழங்கிடவேண்டும் என 50 மீனவ குடும்பங்களை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.