விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை செல்லும் அய்யனார் கோவில் சாலையில் நெடுஞ்சாலை துறை சார்பில் 2000 மரக்கன்றுகள் நடப்பட்டன.
ராஜபாளையம் நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் ஆறுமுகம், உதவிப் பொறியாளர் முத்து முனி குமாரி ஆகியோர் முன்னிலையில் இந்த மரக்கன்றுகள் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சார்பில் நடப்பட்டன.