எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே காத்திருப்பு கிராமத்தில் காவிகுடிநீர் செய்தி எதிரொலி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டம் காத்திருப்பு ஊராட்சிக்கு உட்பட்ட சம்பானோடை கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்த நிலையில் இருந்தது மேலும் இங்கு உள்ள தண்ணீர் காவிநீராக உள்ளதாக கிராம மக்கள் குற்றச்சாட்டு பேரில் செய்தியானது வெளியானது
இதனை அறிந்த தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் தொடர்பு கொண்டு உடனடியாக இந்த கிராமத்திற்கு என்ன தீர்வு என்ன நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு இன்று நேரில் சென்று மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார் உடனடியாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றை உத்தரவிட்டார்
தற்காலிகமாக மூன்று கைப்பம்புகளை குடிநீர் தேவைக்காக அமைக்க உத்தரவிட்டார் அதன் பணிகள் நடைபெற்று வருகிறது
பணிகளையும் பார்வையிட்டார் நேற்று வெளியான செய்திக்கு இன்று உடனடியாக நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியருக்கு கிராம மக்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்