கீழக்கொருக்கை ஜெகநாதபெருமாள் திருக்கல்யாணம்
கும்பகோணம் அருகே கீழக்கொருக்கை ஜெகநாதபெருமாள் இக்கோவிலில் திருக்கல்யாணம் வைபோகம் நேற்றிரவு நடைபெற்றது.
இதனை யொட்டி சிறப்பு ஹோமம் நடைபெற்று மூலவர், உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
மங்கள வாத்தியம் முழங்க சீர் வரிசை கோயிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
பின் மாலை மாற்றும் வைபோகமும் பின் வேத மந்திரம் முழங்க ஹோமங்கள், காப்பு கட்டுதல், ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க மாங்கல்ய தாரணம் என்று சொல்லக்கூடிய திருக்க ல்யாணம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.