விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சிவலிங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு மாணவ, மாணவியர் வயநாடு நிலச்சரிவு குறித்து மிகவும் துயரம் அடைந்தனர்.
தங்களால் இயன்ற நிதி உதவியை வழங்க முடிவு செய்து அவரவர்கள் விருப்பத்தின் பேரில் ரூ.13,500- கேரள முதல்வரின் நிதிக்கு அனுப்பி வைத்தனர். சிவலிங்காபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பலர் மாணவ மாணவியரை பாராட்டினார்கள்.