போடிநாயக்கனூர் நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் தலைமையில் குத்துவிளக்கு ஏற்றி உலக தாய்ப்பால் வாரத்தை துவக்கி வைத்தார்.
மாவட்ட சுகாதாரத் துறை போடிநாயக்கனூர் நகராட்சி ஆணையாளர் கா. ராஜலட்சுமி உத்தரவின் படி சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்த விழாவில் கலந்து கொண்ட தாய்மார்களுக்கு தாய்ப்பால் ஊட்டுவதின் அவசியம் குறித்து தாய்ப்பாலால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்திகள் குறித்தும் தாய்ப்பால் கொடுப்பதால் பெண்ணின் அழகு குறைந்துவிடும் என்பதெல்லாம் மூடநம்பிக்கை எனவே தாய்மார்கள் பிறக்கும் குழந்தைகளுக்கு கட்டாயம் தாய்ப்பால் கொடுத்து பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்று ஆலோசனை கூறப்பட்டது
இந்த விழாவில் போடி நகர் மற்றும் என்னை சுற்றி உள்ள கிராம பகுதி தாய்மார்கள் பலர் கலந்து கொண்டு விழிப்புணர்வு அடைந்தனர்.நகராட்சி சுகாதார அலுவலர் மணிகண்டன் நன்றி கூறினார்