திண்டுக்கல் மாவட்ட அளவிலான பள்ளிகளிகிடையேயான கால்பந்து போட்டியில் மரியன்னை பள்ளி முதலிடம் பிடித்தது.
கால்பந்து கழகம், திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம் , குயின்சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய மாவட்ட கால்பந்து போட்டிகள் திண்டுக்கல் மரியன்னை மேல்நிலைப்பள்ளி, மாரியம்மன் கோயில் பின்புறமுள்ள எஸ்.டி.ஏ.டி., மைதானங்களில் நடந்தது.

கால்பந்து பந்து கழக தலைவர் சுந்தராஜன் தலைமையில் இப்போட்டிகள் நடந்தது. மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா, தலைமையாசிரியர் சிவா, மேற்கு ரோட்டரி சங்க தலைவர் புருசோத்தமன், குயின்சிட்ட ரோட்டரி தலைவர் கவிதா செந்தில்குமார் துவக்கி வைத்தனர். கால்பந்து கழக செயலர் சண்முகம் வரவேற்றார்.

நேற்று நடந்த இறுதி போட்டிகளில் ஆண்கள் பிரிவில் முதலிடம் பெற்ற புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளிக்கு கோபாலகிருஷ்ணன் நினைவு கோப்பை , ரூ.10 ஆயிரம் பரிசு ,சான்றிதழ் வழங்கப்பட்டது.

இரண்டாம் பரிசு பெற்ற வத்தலகுண்டு அன்னை வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு அரசன் ரியல் எஸ்டேட் கோப்பை , ரூ.7 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.

பெண்கள் பிரிவில் முதலிடம் பெற்ற திண்டுக்கல் அங்குவிலாஸ் அணிக்கு காவேரி அம்மாள் நினைவு கோப்பை , ரூ.5 ஆயிரம் பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.

இரண்டாம் இடம் பெற்ற ஜம்புளியம்பட்டி ஜே.ஆர்.சி., பள்ளி அணிக்கு கே.பி.எஸ்., பில்டர்ஸ் கோப்பை , ரூ.3 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது. மேற்கு ரோட்டரி சங்க செயலர் சந்திரசேகரன், குயின்சிட்டி ரோட்டரி சங்க செயலர் பார்கவி, ஒருங்கிணைப்பாளர் பவன்ஜி பட்டேல், துணை ஆளுநர்கள் செல்வகனி, சித்ரா ரமேஷ் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *