பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்
பாபநாசத்தில் திருமண்டங்குடி சர்க்கரை ஆலை மற்றும் வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு கரும்பில் புதிய ரகங்கள் அறிமுக விழா….
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருமண்டங்குடியில் உள்ள கால்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான திருமண்டங்குடி சர்க்கரை ஆலை மற்றும் பாபநாசம் வேளாண்மை விரிவாக்கத்துறை சார்பில் விவசாயிகளுக்கு கரும்பில் புதிய ரகங்கள் அறிமுக விழா திருஆரூரான் சர்க்கரை ஆலை முதுநிலை கரும்பு மேலாளர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பாபநாசம் துணை வேளாண்மை அலுவலர் எபினேசர் முன்னிலை வகித்து சிறப்புரை ஆற்றினார்.
இதில் கரும்பில் புதிய ரகங்களான ( co.14012 ,co .18009 ,co.11015 ) ஆகிய கரும்பு ரகங்கள் பற்றி
முதுநிலை கரும்பு மேலாளர் ராமமூர்த்தி விவசாயிகளுக்கு விளக்கி சிறப்புரை ஆற்றினார்.
மேலும் ஜூலை ,ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மூன்று மாதங்கள் புதிய ரக கரும்பை விவசாயிகள் நடவு பணி செய்தால் ஏக்கர் ஒன்றுக்கு
4 டன் விதை கரும்பு ஆலை மூலம் இலவசமாக வழங்கப்படும் எனவும் , மேலும் விவசாயிகளுக்கு கரும்பு பயிர் கடன் தொடங்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்குகளில் ஏற்பாடு செய்து வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மூத்த முன்னோடி விவசாயிகளான அயோத்தி கலியமூர்த்தி மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு கரும்பில் புதிய ரகங்கள் பற்றி அறிந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.
இந்நிகழ்ச்சியில் கரும்பு அலுவலர்கள் கரும்பு உதவியாளர்கள் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு கரும்பில் புதிய ரகங்கள் பற்றி தெரிந்துகொண்டு பயனடைந்தனர்.