தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக புதிய உறுப்பினர்களுக்கான அட்டைகளை மாவட்ட செயலாளர் ஆர்.கே. பாரதிமோகன் வழங்கி தொடங்கி வைத்தார்.
தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டைகள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர் அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி கஞ்சனூர் மாவட்ட கழக செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
அதிமுக கும்பகோணம் மாநகர செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. ராமநாதன் முன்னிலையில் புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர் அடையாள அட்டைகள் மாநகரைச் சேர்ந்த பகுதி செயலாளர்களிடம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அ.தி.மு.க. ஒன்றிய கழக செயலாளர் ஏ.வி.கே. அசோக்குமார், முத்துக் கிருஷ்ணன், மற்றும் மாநகர கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.