கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம் தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் வணிக மேலாண்மையில் துறை சார்பில் சர்வதேச கருத்தரங்கம் கல்லூரி நிறுவனச் செயலாளர் கம்பம் நா ராமகிருஷ்ணன் எம் எல் ஏ தலைமையில் இணைச் செயலாளர் என் எம் ஆர் வசந்தன் ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன் கல்லூரி முதல்வர் ஜி ரேணுகா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது
நுண்ணறிவு கருவிகளுடன் ஆராய்ச்சி நுட்பங்களில் புரட்சியை ஏற்படுத்துதல் என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது ஆராய்ச்சி சிக்கல்கள் மற்றும் ஆராய்ச்சிக்கான தலைப்பை எவ்வாறு தேர்வு செய்வது என்ற தலைப்பில் பேராசிரியர் கருணாகரன் பேசினார்
ஆராய்ச்சியில் செயற்கை நுண்ணறிவு கருவிகள் என்ற தலைப்பில் திண்டுக்கல் கல்லூரி முதல்வர் பீனிக் முத்துகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார் வணிகவியல் துறை தலைவர் சுசீலா வணிக மேலாண்மையியல் இணை பேராசிரியர் சமந்தா ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் கல்லூரி பேராசிரியர்கள் மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்